டிரம்ப் மீதான தாக்குதலால் அமெரிக்க உளவுத்துறை மீது குற்றச்சாட்டு
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. சம்பவம் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், உளவுத்துறை சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிரசாரம் நடந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டவர்கள் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.
டிரம்பின் பிரசார உரை நடைபெற்ற பகுதியிலிருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து துப்பாக்கிக்காரர் சுட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிலர், துப்பக்கிக்காரரை முன்பே பார்த்ததாகவும், அங்குள்ள பாதுகாவல் அதிகாரிகளிடம் அது பற்றித் கூறியதாகவும் தெரிவித்தனர்.
எனினும் பாதுகாவல் அதிகாரிகள் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.