இலங்கையில் சிறுவர்களை கடத்த முயற்சி; நடப்பது என்ன?
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வீதியிலுள்ள ஏனைய சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
அதேவேளை மன்னார், கிளிநொச்சியில் சிறுவர்கள் கடத்த முற்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலை பாடசாலைகளுக்கு அருகே பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை யாழில் மாணவி ஒருவரை கடத்த முற்பட்டதாக தெரிவித்து, பிரதேசவாசிகளால் சந்தேகநபர் ஒருவர் பொலிசில் ஒப்படைகப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.