உக்ரேனியர்களை மகிழ்ச்சிப்படுத்திய ஆஸ்திரேலியா; சலுகைகள் அறிவிப்பு!
ரஷ்யா -உகரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் உக்ரேனிய அகதிகளுக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக மனிதாபிமான விசா வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
வழங்கப்படும் விசாவை கொண்டு உக்ரேனியர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கலாம், வேலைச் செய்யலாம், மற்றும் மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை உக்ரேனியர்களுக்கு 5 ஆயிரம் விசாக்களை வழங்கியுள்ள நிலையில், அதில் 750 உக்ரேனியர்கள் ஆஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளதாக கூறப்ப்படுகின்றது.
அதே சமயம், எத்தனை உக்ரேனிய அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு இந்த கட்டத்தில் தான் ஒரு வரம்பை நிர்ணயிக்கவில்லை என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் (Scott Morrison) கூறியிருக்கிறார்.
புதிதாக ஆஸ்திரேலியாவுக்குள் வரும் உக்ரேனியர்களுக்கு உதவ உக்ரேனிய ஆஸ்திரேலிய சமூகத்துக்கு நேரடியாக 4.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke) தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை நிகழும் போரினால் ஐ.நா.வின் கணக்குப்படி, உக்ரேனிலிருந்து சுமார் 32 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதுடன், 64 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.