அவுஸ்திரேலியா பொன்டி சம்பவத்தில் இலங்கையில் இருந்து சென்றவரும் பலி
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பாகிஸ்தான் அகதியொருவர் கடந்த சனிக்கிழமை சிட்னியின் பொன்டி வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொன்டியின் வெஸ்ட்பீல்ட் வணிகவளாகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவேளை 30வயது பராஜ் தாஹிர் என்பவரே கத்திக்குத்திற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ஒருவருடத்திற்கு முன்னர் ஐக்கியநாடுகளின் அகதிகளிக்கான தூதரகலாயம் ஊடாக அவர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்றார்.
பாக்கிஸ்தானின் அரசமைபின் கீழ் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்ட சமூகத்தினர் தொடர்ச்சியாக வன்முறைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இவர் அங்கிருந்து தப்பிவெளியேறினார்.
சம்பவம் தினம் அன்று இவர் கடமைக்கு சமூகமளிக்கவேண்டியதில்லை என்ற போதிலும் சில பணியாளர்கள் வருகைதராததால் இவர் பணிக்கு வந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததுடன் பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை (13) இடம்பெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சந்தேக நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.