அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்; இஸ்ரேல் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இஸ்ரேலின் பாதுகாப்பு நிலவரம் மிக வேகமானதாக மோசமானதாக மாறலாம் என்பதால் இஸ்ரேலில் உள்ள தனதுஅனைத்து பிரஜைகளையும் உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளியேறுவது பாதுகாப்பான விடயம் என்றால் உடனடியாக வெளியேறுங்கள் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்பு நிலவரம் மிக மோசமானதாக மாறலாம்
இஸ்ரேலிற்கு எதிராகவும் இஸ்ரேலின் நலன்கள் மீதும் பதிலடி தாக்குதல்கள் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறும் ஆபத்து மிக அதிகளவிற்கு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம், பாதுகாப்பு நிலவரம் மிக வேகமானதாக மோசமானதாக மாறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலும் உள்ள அவுஸ்திரேலியர்களை வெளியேறுமாறு வேண்டுகோள்விடுக்கின்றோம் எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதோடு அந்த பிராந்தியத்தில்விமானநிலையங்கள் மூடப்படலாம் விமானப்போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.