ஆப்கானில் இருந்து வெளியேறுகையில் விமானத்தில் பிறந்த பெண் குழந்தை; பெற்றோர் சூட்டிய பெயர் என்ன தெரியுமா?
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில் அங்குஇருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரி புறப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பிறந்த பெண்குழந்தைக்கு விமானத்தின் அழைப்பு சமிக்ஞையான ரீச் என்பதையே குழந்தையில் பெற்றோர் பெயராக சூட்டியுள்ளனர்.
காபுல் விமானநிலையத்திலிருந்து பொதுமக்களுடன் புறப்பட்ட விமானத்தில் பயணித்த கர்ப்பிணி தாயொருவர் விமானத்திலேயே பெண்குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் விமானத்தின் அழைப்பு சமிக்ஞை ரீச் 828 ஆகும். குழந்தையின் பெற்றோர் இதன் காரணமாக தங்களின் குழந்தைக்கு ரீச் என பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.
ஜேர்மனியின் ரம்ஸ்டெய்ன் விமான தளத்திற்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாயுடனும் தந்தையுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் விமானப்படை அதிகாரி ஜெனரல் டொட் வோல்டெர்ஸ் ( Todd Walters) தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் கூறுகையில்,
அவர்கள் தங்கள் பெண்குழந்தைக்கு ரீச் என பெயரிட்டனர்,அவர்களை கட்டாரிலிருந்து ஜேர்மனியின் ரம்ஸ்டெய்ன் விமானதளத்திற்கு அழைத்துவந்த விமானத்தின் அழைப்பு சமிக்ஞை ரீச் என்பதால் அவர்கள் தங்கள் குழந்தைக்கு அந்த பெயரை சூட்டினார்கள் என அவர் கூறினார்.
அத்துடன் ஆப்கானிலிருந்து பொதுமக்களை விமானம் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையின் போது மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன இந்த குழந்தை மாத்திரம் விமானத்தில் பிறந்துள்ளது ஏனைய இரண்டு குழந்தைகளும் மருத்துவநிலையத்தில் பிறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கிலிருந்து விமானம் புறப்பட்டவேளை தாய் பிரசவவலியால் துடித்துபோது, புத்திசாலித்தனமாக செயற்பட்ட விமானவோட்டி விமானத்தை சரியாக கையாண்டு தாயின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதேவேளை குழந்தை அமெரிக்க விமானத்தில் பிறந்தபோதிலும் பெண்குழந்தைக்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. அமெரிக்காவின் வான்வெளிக்கு வெளியே காணப்படும் அமெரிக்க விமானம் அமெரிக்காவின் ஒரு பகுதியாக கருதப்படாது,
அமெரிக்க வான்வெளிக்கு வெளியே அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைக்காது என அமெரிக்க சட்டம் தெரிவிக்கின்றது.
எனினும் குறித்த பெண்குழந்தை ஒரு நாள் அமெரிக்க பிரஜையாகி விமானப்படையில் இணைந்து கொள்ளும் என வோல்டர்ஸ் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க விமானப்படையின் விமானவோட்டி என்ற அடிப்படையில் ரீச் என அழைக்கப்படும் குழந்தை அமெரிக்க பிரஜையாக வளர்ந்து எங்கள் வான் வெளியில் எங்கள் போர்விமானங்களை செலுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் விமானப்படை அதிகாரி ஜெனரல் டொட் வோல்டெர்ஸ் ( Todd Walters) குறிப்பிட்டுள்ளார்.

