வரி முகவர் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தும் மக்கள்
கனடிய வரி முகவர் நிறுவனம் மீது பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக bare trust வரி அறவீட்டு நடைமுறையில் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளதாக வரி முகவர் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தேவையின்றி பணத்தை விரயமாக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் வரியை செலுத்தி முடித்ததன் பின்னர் திடீரென வரிமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வரி செலுத்துவதற்கான கால அவகாசம் பூர்த்தியாக நான்கு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அறவீட்டு நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வரி முகவர் நிறுவனத்தின் செயற்பாடுகளினால் கனடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணத்தை இழக்க நேரிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழமையான நடைமுறையின் அடிப்படையில் வரிச் செலுத்தப்பட்டதன் பின்னர், நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் இதனால் செலுத்திய வரியை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.