பிரிட்டிஷ் கொலம்பியாவில் பலத்த புயல் காற்று குறித்து எச்சரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பலத்த புயல் காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கரையோர பகுதிகளில் அதிக அளவில் இவ்வாறு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று இரவு மற்றும் புதன் காலை வேளையில் புயல் காற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு வாங்கூவர் தீவுகள் மற்றும் வடக்கு மத்திய கரையோர பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காற்று தாக்கம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மரங்கள் முறிந்து விழக்கூடும் எனவும் பயணங்கள் தாமதமாகலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காற்றுக்கு பாம் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.