விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணியால் பரபரப்பு!
அமெரிக்காவின் லாஸ் வேகாசில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
லாஸ் வேகாசில் இருந்து மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
இதையடுத்து விமான நிலையம் விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும், பயணி கூறியதை போன்று வெடிபொருட்கள் எதுவும் அவரது லக்கேஜில் கிடைக்கவில்லை.
இதையடுத்து பயணியை போலீசார் கைது செய்தனர்.
பயணி கோபத்தில் விடுத்த மிரட்டல் காரணமாக விமானம் 37 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.