சிறையில் இருக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நாடுகடத்தப்பட வாய்ப்பு
பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் முன்னாள் உலக டென்னிஸ் சாம்பியன் போரிஸ் பெக்கர் நாடுகடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகை வேளையில் அவர் சொந்த நாடான ஜேர்மனியில் இருப்பார் என்றே அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர். ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போரிஸ் பெக்கர், புதிய திட்டத்தின் அடிப்படையில், சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
திவாலானதாக அறிவித்த பிறகு தனது சொத்தில் 2.5 மில்லியன் பவுண்டுகளை போரிஸ் பெக்கர் மறைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏப்ரல் மாதம் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், 7 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்துள்ள பெக்கர், சொந்த நாடான ஜேர்மனிக்கு திரும்ப இருக்கிறார்.