போர்க்களத்தில் சிறுவனின் நெகிழ்ச்சி சம்பவம் ; வைரலாகி வரும் வீடியோ
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்த போரில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் போர்க்களத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் சிறுவன் தனது நாட்டின் மீதுள்ள காதலை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுபூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் முக்கியமான பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை நோக்கி கை அசைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கையில் உக்ரைன் தேசியக் கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களில் கொடியை அசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்தார்.
அந்த வகையில் சிறுவனின் தேசபக்தியைப் பாராட்ட ராணுவ விமானி முடிவு செய்தார். எனவே வழக்கமான ராணுவப் பணிகளுக்கு இடையே சிறுவன் கொடியுடன் நிற்பதைக் கண்ட பைலட் உடனடியாக தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.
பின்னர், சிறுவனிடம் ஓடிச்சென்ற விமானி, மிட்டாய், பொம்மைகள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டியை கொடுத்துள்ளார்.
சிறுவனின் தேசபக்தியைப் பாராட்டி விமானி வேகமாகச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.