பிக்கரிங்கில் எரியூட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் மீட்பு
கனடாவின் டர்ஹம் பகுதியின் பிக்கரிங்கில் எரியூட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆழமில்லாத புதைகுழியொன்றிலிருந்து இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மனித எச்சங்கள் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேதப் பரிசோதகர் மற்றும் இரசாயன பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மனித எச்சங்களை கண்ட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு இந்த சம்பவம் பற்றி அறிவித்துள்ளார்.
இந்த மனித உடல் எரியூட்டப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
பிரதான பாதையிலிருந்து 500 மீற்றர் தொலைவில் இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்திலும் குறித்த பகுதிக்கு அருகாமையில் 32 வயதான ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.