கனடாவின் இந்தப் பகுதியில் போலி பார்க்கிங் டிக்கட் குறித்து எச்சரிக்கை
கனடாவின் கல்கரி பகுதியில் போலி பார்க்கிங் டிக்கட் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்கரி வாகனத் தரிப்பு அமைப்பு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில மோசடிகாரர்கள் போலி பார்க்கிங் டிக்கட்களை அச்சிட்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமேன அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி பார்க்கிங் டிக்கட் கிடைக்கப் பெற்றால் அதனை உடனடியாக அழித்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி பார்க்கிங் டிக்கட் என்ற சந்தேகம் எழுந்தால் 403-537-7000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் தரித்தல் தொடர்பான விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு இவ்வாறு பார்க்கிங் டிக்கட் வழங்கப்படுகின்றது.
போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி தண்டப் பணம் அறவீடு செய்ய முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.