அவுஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் கேமரா
தாய்லாந்தில் உள்ள அவுஸ்திரேலியா தூதரகத்தில் உள்ள பெண்கள் ஓய்வறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவுஸ்திரேலியா தூதரகம் உள்ளது. தூதரகத்தில் உள்ள பெண்கள் ஓய்வறையில் ரகசிய கேமரா தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியா தூதரக முன்னாள் ஊழியர் ஒருவர் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வெளியுறவு அமைச்சகம் அதன் அனைத்து ஊழியர்களின் நலன்கள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து தேவையான ஆதரவை வழங்குகிறோம்.
இருப்பினும், மேலும் விவரங்களை வழங்க அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தூதரக பாதுகாப்பில் பெரும் மீறலைக் காட்டுவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.