பெற்றோர் தொடர்பில் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்த கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா
கனடா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் (Anita Anand) தனது பெற்றோர் தொடர்பில் பழைய மகிழ்ச்சியான நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இந்த நிலையில் சமீபத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் அனிதா ஈடுபட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Today reminded me of the many weekends we spent in Nova Scotia skiing. My parents enrolled us in almost every sport and activity possible and weekends were usually spent outside. pic.twitter.com/QtFiMEkRkN
— Anita Anand (@AnitaAnandMP) February 5, 2022
அனிதா ஆனந்த் பதிவில், Nova Scotia பனிச்சறுக்கு விளையாட்டில் இளம் வயதில் நாங்கள் கழித்த பல வார இறுதி நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது.
எனது தந்தை மற்றும் தாய் இருவரும் எல்லா விளையாட்டு மற்றும் செயல்பாடுகளிலும் எங்களைச் சேர்த்துவிட்டனர், எங்களின் வார இறுதி நாட்கள் பொதுவாக வெளியில் தான் செலவிடப்படும்.
Today reminded me of the many weekends we spent in Nova Scotia skiing. My parents enrolled us in almost every sport and activity possible and weekends were usually spent outside. pic.twitter.com/QtFiMEkRkN
— Anita Anand (@AnitaAnandMP) February 5, 2022
மேலும், நாங்கள் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ, இந்நாடு வழங்கும் அனைத்து வசதிகளை நாங்கள் பாராட்ட வேண்டும் என்பதை உறுதி செய்ய பெற்றோர் விரும்பினர். இப்போது நான் என் பெற்றோர்களை பற்றியும், என் குழந்தை பருவத்தையும் நினைத்து பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.