மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவைத் தொடர்ந்து கனடா பணத்தில் செய்யப்படவிருக்கும் மாற்றம்
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
காமன்வெல்த் நாடுகளில், கரீபியன் நாடுகள் சில மன்னர் சார்லசை தங்கள் நாட்டின் தலைவராக ஏற்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவுஸ்திரேலியாவிலும், மன்னர் சார்லசை தங்கள் நாட்டின் தலைவராக ஏற்க எதிர்ப்பு உருவாகிவருகிறது.
Ben Birchall/Pool via AP)
ஏப்ரல் மாதத்தில், the Angus Reid Institute என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், கனேடியர்களில் ஐந்தில் மூன்று பேர், சார்லசை தங்கள் நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பது தெரியவந்தது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 64 சதவிகித கனேடியர்கள், அரசு நிகழ்ச்சிகளில் மன்னர் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்வதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறியுள்ளார்கள்.
Richard Heathcote/Pool via AP
62 சதவிகித கனேடியர்கள், கனடா பணத்தில் சார்லஸ் உருவத்தை பொறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவைத் தொடர்ந்து கனடா முக்கிய நடவடிக்கை ஒன்ற எடுக்கவிருக்கிறது.
ஆம், கனடாவின் பணத்தில், குறிப்பாக நாணயங்கள் மற்றும் 20 டொலர் நோட்டில் மன்னர் சார்லசுடைய உருவம் பொறிக்கப்படுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
Spencer Colby/The Canadian Press
முதலில், நாணயங்களிலும், பின்னர், 20 டொலர் நோட்டிலும் மன்னர் சார்லசுடைய உருவம் பொறிக்கப்பட உள்ளது. ஆனாலும், அது எளிதான ஒரு வேலை அல்ல.
முதலில், மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு பல வாரங்கள் பிடிக்கும். அதே நேரத்தில், மன்னர் சார்லசுடைய உருவம் பொறித்த 20 டொலர் நோட்டுக்கள் வெளியாகவோ, சில ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jeff J Mitchell/Getty Images
மன்னர் உருவம் பொறித்த பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை, மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறித்த பணம் செல்லுபடியாகும்.