வாகனத் தொடரணி போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்த ஒட்டாவா நகர மக்கள்!
கனடாவின் முக்கிய மாகாணங்களில் சில நாட்களாக வாகானத் தொடரணி போராட்டம் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, வாகனத் தொடரணி போராட்டத்தினை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டாவாவில் Freedom Convoy என்னும் தொனிப் பொருளில் ட்ரக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்திற்கு எதிராகவே ஒட்டாவா நகர மக்களினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும் குறித்த போராட்டங்களினால் தமக்கு 9.8 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஒட்டாவா நகர மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக ஹோர்ன் ஒலி எழுப்பியதனால் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நகர மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.