கனடிய போர் வீரர்களுக்கு கௌரவம்
கனடாவின் போர் வீரர்கள் இன்றைய தினம் கௌரவ படுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிரேஸ்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்விற்காக ஒட்டாவாவில் ஒன்றுகூட உள்ளனர்.
இரண்டாம் உலகப்போர் காலம் தொடக்கம் இவ்வாறு படைவீரர்கள் கௌரவபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 80 ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது. ஆப்கானிஸ்தான், சைப்ரஸ் போன்ற நாடுகளில் கனடிய அமைதி காக்கும் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போரில் உயர்நீத்த படையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி நடைபெற உள்ளது.
தேசிய படை வீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகாமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.