உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம்
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன.
விடயம் என்னவென்றால், கனடா இதற்கு முன் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது, தற்போது நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.
கனடா இரண்டாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கு இறங்கியதற்கு முக்கிய காரணம், அது, வர்த்தகம் செய்வதற்கான அனுமதி வழங்குதல், பாரம்பரியம் மற்றும் தொழில் முனைவு போன்ற விடயங்களில் குறைவான புள்ளிகளைப் பெற்றதுதான்.
அதே நேரத்தில், ஆய்வுகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் மற்ற நாடுகளால் ஒரு நாடு எப்படிப்பட்டது என பார்க்கப்படுகிறது, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சுற்றுலாவுக்கு உகந்த இடம் ஆகிய விடயங்களில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது கனடா.
ஆகவேதான், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடிக்க கனடாவால் முடிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.