ரஷ்யாவிற்கு எதிராக விசேட குழுவை உருவாக்கும் கனடா
ரஷ்யாவிற்கு எதிரான விசேட குழுவொன்றை உருவாக்க உள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிழையான தகவல்கள் போலிப் பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கில் இந்த குழு உருவாக்கப்பட உள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான தடையை மேலும் விஸ்தரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சுமார் 62 பேருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் கனேடிய பிரதமர் இந்த தடை குறித்து அறிவித்துள்ளார்.
காணொளி தொழில்நுட்பம் ஊடாக அவர் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு தமது நாடு மீதான தடைகளே காரணம் என ரஷ்யா போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு விசேட குழுவொன்று கனடாவில் நிறுவப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பொலிஸ் மற்றும் இராணுவத்தை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டொலர் செலவிட உள்ளதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.