கனேடிய அரசால் சிதைவடைந்த இந்திய மாணவர்களின் நம்பிக்கை
இந்திய மாணவர்களின் நம்பிக்கையை கனேடிய அரசு சிதைத்துள்ளது.
2024-ஆம் ஆண்டில், படிப்பு அனுமதிகள் (study permits) கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
சிறு தவறால் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்., லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் சிறு தவறால் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்.
லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வரம்பு விதிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த ஆண்டு காலாவதியாகும் படிப்பு அனுமதிகளுக்கு இணையாக புதிய படிப்பு அனுமதி வழங்கும் கொள்கையை தேர்வு செய்துள்ளதாக அவர் கூறினார்.
2024-ஆம் ஆண்டில் கனடாவினால் வழங்கப்படும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கை 3.64 லட்சமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது