உலக தரப்படுத்தலில் கனடிய கடவுச்சீட்டின் நிலை
சர்வதேச ரீதியில் கடவுச் சீட்டுக்கள் குறித்து தரப்படுத்தலில் கனடிய கடவுச்சீட்டு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
உலகின் கடவுச்சீட்டுக்கள் குறித்த தரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த கடவுச்சீட்டுக்களைக் கொண்ட நாடுகளின் தர வரிசையில் கனடா 7ம் இடத்தை வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் உலகத் தர வரிசையில் 7ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2024ம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டியின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடிய கடவுச்சீட்டு உடையவர்கள் 188 நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகளின் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.
எனினும் கனடிய கடவுச்சீட்டு உடைய ஒருவர் உலகின் அநேக நாடுகளுக்கு சுலபமாக பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் உலக தர வரிசையில் கனடிய கடவுச்சீட்டு 8ம் இடத்தை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.