கனடாவில் இத்தனை பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனரா?
கனடாவில் சுமார் 1.5 மில்லியன் பேர் புற்று நோய்ப் பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டில் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு வாழ்ந்து வருவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கனேடிய புற்று நோய் அமைப்பினால் இந்த புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களின் ஊடாக இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக காணப்பட்டது.
எனினும் பத்தாண்டுகள் இடைவெளியில் புற்று நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனால் உயர்வடைந்துள்ளது.
நவீன மருத்துவ வசதிகள் மற்றும் ஆய்வுகள் காரணமாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலம் உயிர் வாழ்வோருக்கு புற்று நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்ன கனடாவின் பிரபல மருத்துவர் டொக்டர் ஜேனட் டென்சி தெரிவித்துள்ளார்.
புற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் 25 ஆண்டுகள் வரையில் உயிர் வாழும் சந்தர்ப்பங்களும் வெகுவாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.