மக்களுக்கான வீடுகள் தொடர்பில் கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து மக்களுக்காக 5,600க்கும் அதிகமான வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து 2.7 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் 18 வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,600க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுமே வாடகைக்கு விடப்படுவதற்காகவே கட்டப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.