கனடா விற்பனைக்கு அல்ல: ட்ரம்பிடமே நேரடியாக கூறிய கனடா பிரதமர்
தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா பிரதமரான மார்க் கார்னி.
அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இனைப்பது குறித்தே பேசிக்கொண்டிருந்தார் ட்ரம்ப்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதால் கனடாவுக்கு வரி விலக்கு, பாதுகாப்பு என பல நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் ட்ரம்ப்.
அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கனடா பிரதமரான மார்க் கார்னி, அவர் பேசி முடித்ததும், சில இடங்கள் விற்பனைக்கு அல்ல, எப்போதுமே அல்ல என்றார்.
உடனே, எப்போதுமே அல்ல என்று சொல்லாதீர்கள் என ட்ரம்ப் கூற, எப்போதுமே அல்ல, எப்போதுமே அல்ல, என மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினார் கார்னி.
இந்த நிகழ்வைக் காட்டும் வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாக, ’கார்னி பேசிக்கொண்டிருப்பது ஒரு சுவருடன், அதற்கு மூளை செல்களே கிடையாது’ என்று விமர்சித்துள்ளார் ஒருவர்.
அவரைப்போலவே, அமெரிக்காவும் கனடாவும் இணைந்தால் நல்லது நடக்கும் என, சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் ட்ரம்பை பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.