மூன்று பிள்ளைகள் உட்பட 7 பேர்களின் சடலம்: நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்
அமெரிக்காவின் வடமேற்கு மினசோட்டா பகுதியில் குடியிருப்பு ஒன்றில் 7 பேர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு மினசோட்டாவில் ஞாயிறன்றே குறித்த இரட்டை குடியிருப்பில் இருந்து 7 சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய ஆய்வுக்கு பின்னரே தகவல் தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று இரவு உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சுமார் 8 மணியளவில் பொலிசார் குறித்த குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே 7 பேர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பினுள் வன்முறை சம்பவம் நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை எனவும், வலுக்கட்டாயமாக எவரும் நுழைந்ததாகவும் தெரியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும், நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
உடல்களை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், அங்கே உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.