வரி விதிப்பால் அமெரிக்க திரைப்படங்களுக்கு சீனாவில் தடை!
அமெரிக்கத் திரைப்படங்களுக்கு சீன அரசாங்கம் முழுமையான தடையை விதித்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த அதிரடி முடிவு, உலகின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சந்தைகளில் ஒன்றாக விளங்கும் சீனாவில் அமெரிக்க சினிமாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது அமெரிக்க-சீன உறவில் ஏற்கனவே நிலவும் பதற்றங்களை மேலும் மோசமாக்கும் என கூறப்படுகின்றது.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரிகள், சீனப் பொருட்களுக்கு 54% வரை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனா பதிலடியாக இந்தத் தடையை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, அரிய புவி உலோகங்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியிருந்தது, இது அமெரிக்காவின் மின்னணு மற்றும் பாதுகாப்புத் துறைகளை பாதித்தது. இந்நிலையில் , அமெரிக்கத் திரைப்படங்களுக்கு சீனா தடை விதித்து உள்ளது.