சீனா கடும் ஆபத்தாக மாறியுள்ளது; அமெரிக்கா மூத்த ராணுவ அதிகாரி
சீனா கடந்த ஐந்தாண்டுகளில் இன்னும் கடுமையாகவும் ஆபத்தானதாகவும் மாறிவிட்டதாக அமெரிக்கா மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பசிபிக் வட்டாரத்தில் அத்துமீறியுள்ள சீன விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாய் ஜெனரல் மார்க் மில்லி (Mark Milley) குறிப்பிட்டார்.
எனினும் அவர் அதன் தொடர்பில் குறிப்பிட்ட விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. சீனாவின் ராணுவ வளர்ச்சி, பசிபிக் வட்டாரத்தைத் தடையற்றதாகவும் வெளிப்படையாகவும் வைத்துக்கொள்ளுதல் ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.
அதோடு பெய்ச்சிங்கின் அதிகரிக்கும் செல்வாக்கை கட்டுப்படுத்த அது முயற்சியில் இறங்கியுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை வர்த்தகம், தைவான் ஆகிய விவகாரங்களும் அமெரிக்க-சீன உறவுகளைப் பாதிக்கின்றன.
அதேவேளை அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்குச் செல்வதன் தொடர்பில் சீனா கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.