இத்தாலி நாடாளுமன்றத்தில் கைகலப்பு ; ஜி7 மாநாடு இடம்பெறவுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம்
இத்தாலியில் ஜி7 மாநாடு இன்று (14) நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமத் தொடங்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நேற்று முன் தினம் (12) நாடாளுன்ற சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதிக சுயாட்சி அளிக்கும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு
இதன்பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் வலதுசாரி கூட்டமைப்பு கொண்டுவந்த இந்த சட்டத்தினை எதிர்கட்சியான 5 ஸ்டார் இயக்கம் கடுமையாக எதிர்த்தது.
சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 5 ஸ்டார் இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் லியோனார்டோ டோனோ, பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி நின்றிருந்த இடத்துக்கு நடந்து சென்று அவர் மீது இத்தாலியக் கொடியை போர்த்த முயன்றார்.
Today MP waved Italy’s flag in parliament and was brutally assaulted by Salvini’s party MP ( PM Meloni’s coalition partner) who has close ties to neo-Nazi-fascist groups.
— Rula Jebreal (@rulajebreal) June 12, 2024
Mussolini’s heirs are once again deploying violence in the halls of democracy. ?? ??pic.twitter.com/SpaOtg0EAM
இதனால் ஆளும் வலதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் லீக் மற்றும் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சிப் பிரதிநிதிகள் டோனோவிடம் விரைந்து சென்று அவரை பிடித்து இழுத்தபோது ஏற்பட்ட கைகலப்பில் இருந்து டோனோவை காப்பற்ற காவலர்கள் படாதபாடு பட்டனர்.
காயமடைந்த டோனோ அவையில் இருந்து வீல் சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து டோனோ ஊடகங்களுக்கு கூறுகையில், என்னை அவர்கள் பல முறை உதைத்தனர்.
எனது மார்பில் வலுவாக ஒரு உதை விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என தெரிவித்தார். சம்பவத்தை அடுத்து அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த கைகலப்பு தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.