காலநிலையினால் கூடுதலாக பாதிக்கப்படும் கனடியர்கள்!
காலநிலை காரணமாக கனடியர்கள் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கனடிய மக்கள் நேரடியான பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த நிலைமைகள் காலநிலை மாற்றம் தொடர்பான மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீ, வெப்ப அலை, வெள்ளம், புயல் காற்று போன்ற அசாதாரண காலநிலையினால் கனடாவின் மூன்றில் ஒரு பங்கினர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் இந்த கருத்துக்கணிப்பு இணைய வழியில் நடத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் ஜூலை மாத நடுப்பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் ஒரு பில்லியன் அளவில் காப்புறுதி நட்ட ஈட்டுத்தொகை கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அட்லாண்டிக் கனடாவின் சில பகுதிகளிலும் இவ்வாறு சீரற்ற கால நிலையினால் கடந்த மாதம் பாதிப்பு ஏற்பட்டது.
கனடாவின் அனேக மாகாணங்களில் சீரற்ற காலநிறையினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சஸ்கற்றுவான் மற்றும் மானிடோபா ஆகிய மாகாணங்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவான நிலையில் காணப்படுகின்றது.