டிரம்ப் வரியால் சரிந்த காபி விலை!
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் இன் புதிய வரிகள் காரணமாக உலகளாவிய காபி விலைகளும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளன.
உலகின் முன்னணி காபி உற்பத்தியாளராக வியட்நாம் உள்ளது, மேலும் அமெரிக்கா அதன் மீது விதித்த வரி விகிதம் 46% ஆகும்.
வியட்நாமில் இருந்து காபி இறக்குமதி
அமெரிக்காவில் காபி உற்பத்தி செய்யப்படுவதே கிடையாது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அனைத்து காபியும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
பிரேசில், வியட்நாம் ,கொலம்பியா, இந்தோனேசியா நாடுகளிடமிருந்து தான் அமெரிக்கா பெரிய அளவில் காபி இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகளுக்கெல்லாம் 10சதவீதம் முதல் அதிகபட்சமாக 46சதவீதம் வரை இறக்குமதி விதிக்கப்பட்டு இருப்பதால் காபியின் விலை உயரும்.
குறிப்பாக வியட்நாமிற்கு 46 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தேவையான பெரிய அளவிலான காபி வியட்நாமில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் கோப்பி இறக்குமதியை நிறுத்திவிடும் நிலை காணப்படுகின்றது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.