இடிந்துவிழுந்த மேம்பாலம்; தெய்வாதீனமாக தப்பிய ஜோ பிடன்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிட்ஸ்பர்க் நகர் வர இருந்த சில மணி நேரத்துக்கு முன் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ள நிலையில் தெய்வாதீனமாக பிடன் உயிர்பிழைத்துள்ளார்.
அமெரிக்காவின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து விவரிக்க அதிபர் ஜோ பைடன் பிட்ஸ்பர்க் நகர் வந்தார். அவர் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன், பனியால் மூடப்பட்டிருந்த மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து சாலையில் விழுந்தது.
இதன்போது சாலையில் சென்ற வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் அங்கு பதிக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து பெரியளவில் எரிவுவாயு கசிவு ஏற்பட்டு பின்னர் நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.