ஓமிக்ரோனுக்கு எதிராக இந்த இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவு! WHO
ஃபைசர், மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ஓமிக்ரோன் வைரஸுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஓமிக்ரோன் உலகை அச்சுறுத்து வருகிறது. 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்து விட்ட இந்த வைரஸ், முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. இதனால் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் மற்றும் பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஓமிக்ரோன் வைரஸுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருப்பது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பைசர் அல்லது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2 டோஸ்களுக்குப் பிறகு, டெல்டாவுடன் ஒப்பிடும்போது, Omicron எதிரான அவற்றின் செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதை பிரித்தானியாவில் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்ட 2 வாரங்களுக்குப் பிறகு அதிக செயல்திறன் இருந்தது” என கூறப்பட்டுள்ளது.