ஒன்றாரியோவில் மீண்டும் தலை தூக்கும் கோவிட்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வார கால இடைவெளியில் கோவிட் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
ஒன்றாரியோ சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கோவிட் தொற்று உறுதியான 1265 பேர் மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு கொல்வோரின் எண்ணிக்கை 133 ஆக உயர்வடைந்துள்ளது.
அன்னைய நாட்களாக கோவில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை உயர்வடைந்து போதிலும் கடந்த ஜூலை மாதம் கோடைகால பருவத்தில் காணப்பட்ட தொற்று உதியாளர் எண்ணிக்கை அளவிற்கு உயர்வடையவில்லை என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
குளிர்காலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ளக கட்டிடங்களில் ஒன்று கூடுதல் போன்ற காரணிகளினால் நோய் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கனேடிய எல்லை பகுதிகளில் கோவிட் கட்டுப்பாடு குறித்த சட்டங்கள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.