ப்ரீஸரில் நிரப்பப்பட்டிருந்த இறந்த புறாக்கள்: இன்னும் விலகாத மர்மம்
பிரிட்டனில் டர்ஹாம் மாவட்டத்தில் டார்லிங்க்டன் பகுதியில் கவுன்சில் ஊழியர்களே ப்ரீஸருக்குள் நிரப்பட்ட இறந்த புறாக்களை கைப்பற்றியுள்ளனர்.
குறைந்தது 100 புறாக்களேனும் அந்த கைவிடப்பட்ட ப்ரீஸரில் அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் உணவுக்காக அவை பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
இதனிடையே, அழுகிய நிலையில் இருக்கும் அந்த புறாக்களை பொதுவெளியில் கைவிட்டு சென்றவர்களை கண்டிப்பாக கண்டுபிடிப்போம் என கவுன்சில் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இது ஒரு கொடூரமான செயல் என குறிப்பிட்டுள்ள கவுன்சில் நிர்வாகி ஒருவர், பூட்டப்படாத ஒரு ப்ரீஸருக்குள் இறந்த புறாக்களை கைவிட்டு செல்வது உண்மையில் கண்டிக்கத்தக்கது என்றார்.
பறவைகளை சுட்டு பொழுது போக்கும் நபர் எவரேனும் இப்படியான செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.