கனடாவில் வீடற்றவரைக் குத்திக் கொன்றதாக ஒப்புக்கொண்ட 4 சிறுமிகள்
வீடற்ற கனடியரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை நான்கு பதின்ம வயது சிறுமிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
டொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் கெனத் லீ என்ற வீடற்ற நபர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த லீயின் சகோதரி மைத்துனர்கள் ஆகியோர் வழக்கு விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்பு உடைய மேலும் நான்கு சிறுமியருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராகவும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தனது சகோதரனின் இழப்பு பெரும் வேதனையை அழிப்பதாக லியின் சகோதரி தெரிவித்துள்ளார்.
13 முதல் 16 வயது வரையிலான 8 சிறுமிகள் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதுபான போத்தல் ஒன்றுக்காக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.