மியான்மார் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது
மியான்மார் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று (3) 3,085 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிகின்றன.
நிலச்சரிவில் சிக்கி 4,715 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 341 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மார் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், காலரா மற்றும் பிற நோய்களால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான மண்டலே, சாகிங் மற்றும் நய்பிடாவ் தலைநகர் போன்ற இடங்களில் அதிகரித்து வரும் அபாயத்தைக் குறிப்பிட்டது.
அதே நேரத்தில் உடல் பைகள் உட்பட $1 மில்லியன் நிவாரணப் பொருட்களைத் தயாரித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.
இந்த நிலநடுக்கம் 28 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு பகுதியை உலுக்கியதில் மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது