பிரித்தானியாவில் வேகமடுக்கும் 'டெல்டா' வகை கொரோனா!
பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஜூன் 21-ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை, அதற்கு முந்தையை நான்கு வாரங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அமைச்சரவையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
நான்காவது படிநிலைக்கு (Step 4) முன்னேறுவது என்பதில் கடைசி கட்டத்தில் கூட மாற்றம் ஏற்படலாம். அதற்காக வரும் வாரங்களின் தரவுகளை மிக உன்னிப்பாக கவனிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
ஜூன் 21-ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள நான்காவது படிநிலை தளர்வில், தற்போது மூடப்பட்டுள்ள இரவு நேர கிளப், உள்ளரங்குகள் போன்ற உட்புற இடங்களைத் திறக்கப்படவுள்ளது.
அத்துடன் பெரிய நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட அனைத்து கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் லங்காஷயர் போன்ற இடங்களில் டெல்டா வகை கொரோனா தொற்று அதிகமாக பதிவாக்கிவருகிறது.
அதோடு பொது சுகாதார வேல்ஸ் (PHW ) படி, நாட்டில் டெல்டா தொற்று 178-ஆக அதிகரித்துள்ளதுடன் கடந்த 4 நாட்களில் மட்டும் 81 பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இதேவேளை , இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் உள்ளூரிலேயே மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.