சொல்லாமல் கொல்லக்கூடியது நீரிழிவு!
இன்று உலக நீரிழிவு தினம் ஆகும் . உலகில் இன்று 500 மில்லியன் பேருக்கு மேல் இனிப்பு நீரால் அவதியுறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் நீரிழிவு நோய் மக்களை சொல்லாமல் கொல்லக்கூடியது என்று மருத்துவத்துறை சொல்கிறது.
1991ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினம் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் உலகச் சுகாதார நிறுவனம் 2006-ஆம் ஆண்டில் அதை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
நீரிழிவு நோய் சுகாதாரம், பொருளியல் இரண்டையுமே கடுமையாகப் பாதிப்பதைக் கண்டு உலகச் சுகாதார நிறுவனம் அது குறித்த அக்கறையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
நீரிழிவு நோயில் Type One, Type Two என்று இரண்டு வகை உள்ளது.
அதேவேளை கடுமையான நோய் கண்டவர்கள் வேலையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம்கூட ஏற்படுவதால் அதைப் பொருளியலைத் தாக்கும் நோய் என்று உலகச் சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.