102 ஏக்கர் பண்ணை வீட்டை விற்கும் இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன்!
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் தனது 120 ஏக்கர் பண்ணை வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்.
கலிஃ போர்னியாவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டை ரூ.270 கோடிக்கு அவர் விற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு சொகுசு அம்சங்கள்
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அந்த எஸ்டேட்டில் 8000 சதுரடி பரப்பளவில் 5 படுக்கை அறைகளுடன் கூடிய பங்களா ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், கெஸ்ட் ஹவுஸ், அலுவலகம், பனை மரங்களால் சூழப்பட்ட நீச்சல் குளம் என பல்வேறு சொகுசு அம்சங்கள் உள்ளன.
அவர் தனது மனைவியுடன் பெரும்பாலும் நியூயார்க்கில் வசிப்பதால் பண்ணை வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்.
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் டைட்டானிக், அவதார் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.