கனடாவின் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க சிற்றூந்துகள், பால் மற்றும் மதுபானப் பொருட்கள் மீதான "சீரற்ற நடத்தையை" கண்டிக்கும் வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 50% வரியை விதித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் 30 நாட்களில் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இருப்பினும், எரிசக்தி, கனிம வளங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிகள் இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த ஒருபக்க நடவடிக்கையானது கனடா - அமெரிக்கா - மெக்சிகோ ஒப்பந்தத்தை மீறுவதாகவும், கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கனடிய பிரதமர் மார்க் கார்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பான வர்த்தக முரண்பாடுகளே இந்த புதிய வரி விதிப்புக்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.