துயரமும் கவலையும் நிறைந்த முகங்களுடன் வெளியேறும் மக்கள்!
கிழக்கு உக்ரைனிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவதால், துயரமும் கவலையும் நிறைந்த முகங்களை பார்க்கக்கூடியதாக இருந்ததாக ஐரோப்பிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டொனெட்ஸ்க் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் மக்களின் முகங்களில் துக்கமும் கவலையும் வெளிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சிலர் மேற்கு உக்ரைனில் உள்ள எல்விவ் நகரின் பாதுகாப்பிற்காக ரயிலில் ஏற பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.
டொனெட்ஸ்க் நகரின் வடமேற்கில் உள்ள போக்ரோவ்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து இந்த மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
ரஷ்யா துருப்புக்களின் படையெடுப்பிற்குப் பின்னர் இப்பகுதி கடுமையான சண்டைகளைக் கண்டுள்ளது, அதில் பாதி தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.