துபாயில் விமான நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் ; மத்திய கிழக்கில் பெரும் பதற்றநிலை
துபாய் விமான நிலையத்துக்கு அருகில் ஈரான் இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றமை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
எனினும் இந்த தாக்குதலால் விமான நிலைய செயற்பாடுகளில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், துபாய் க்ரீக் துறைமுகத்துக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது புதன்கிழமை (11) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் கட்டடத்தில் பாரியளவில் தீ பரவியதாகவும், பின்னர், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் துபாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினு ம் இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கட்டடத்தில் வசிப்பவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கட்டடத்தை தாக்கிய ட்ரோன் ஈரான் உரியது என்றும் துபாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.