பொருளாதார நெருக்கடி ; பிரிக்ஸ் வங்கியில் இணையும் ஈரான்
பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் ஈரான் விரைவில் இணையவுள்ளதாக ஈரானன் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான போரினால் ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அந்நாடு தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய வளர்ச்சி வங்கியில் இணையும் முடிவை ஈரான் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரான் இணைவது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேவேளை, புதிய வளர்ச்சி வங்கியின் தரப்பிலிருந்தும் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி, உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
பிரிக்ஸ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேவேளை ஈரான் கடந்த 2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.