பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அதிகரிப்பு காரணமாக மாகாணத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலந்த 2021 ஆம் ஆண்டு அளவிற்கு வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகவில்லை என்ற போதிலும் ஓரளவு வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் வெப்ப அலை காரணமாக 619 பேர் உயிரிழந்திருந்தனர்.
கடந்த ஆண்டிலும் கடுமையான வெப்பநிலை காரணமாக 16 மரணங்கள் பதிவாக இருந்தன.
கடுமையான வெப்பநிலை ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்றவர்கள் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.