பிரபல நாடொன்றில் மாணவர்கள் நடத்தி பார்த்த பொய்யான திருமணம்!
பாகிஸ்தானிய பல்கலை கழகத்தில் மாணவர்கள் திருமணத்திற்கு முன் ஏற்படும் பதற்றம் தணிவதற்காக பொய்யான திருமணத்தை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் பல்கலை கழகத்தில், படிக்கும் மாணவர்களே இவ்வாறு செய்துள்ளனர்.
குறித்த பல்கலை கழகத்தின் வளாகத்தில் தனித்துவ நிகழ்ச்சி ஒன்றுக்கு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அது ஒரு திருமண நிகழ்ச்சி. இசை கச்சேரி, ஆடல் பாடல் என அனைத்தும் அதில் இடம் பெற்றன.
பொதுவாக திருமணம் என்றவுடன் மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றி கொள்ளும்.
பெரிய செலவுகள், விருந்தினர்களை உபசரிப்பது மற்றும் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செல்வது என்பது உண்மையில் ஒரு பெரிய பணியாகவே இருக்கும்.
அதனாலேயே, இதற்கு ஓர் தீர்வு காண லாகூர் பல்கலை கழகத்தின் மேலாண் அறிவியல் மாணவர்கள் முடிவு செய்தனர்.
Lums having an annual fake shaadi, where two seniors are picked to get married, sounds so fun. pic.twitter.com/B5inkSmivB
— Lord Ayan (@ayan_khan17) March 12, 2023
இதன்படி, ஆண்டு விழாவின்போது, இரண்டு மூத்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த பொய்யான திருமண நிகழ்வில் மாணவர்கள் பாலிவுட் திரை பாடல்களுக்கு நடனம் ஆடியும், பொய்யான மணமக்களை கேலி செய்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதுதொடர்பில் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.