நடு வானில் உயிருக்கு போராடிய பயணி; விமானப் பணிப் பெண்ணின் நெகிழ்ச்சி செயல்
நாடு வானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணியொருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடன் செயற்பட்ட விமானப் பணிப்பெண் சரியான நேரத்தில் முதலுதவிகளை வழங்கி பயணியின் உயிரை மீட்டுள்ளார்.
கனடாவை மையமாகக் கொண்டு சன்விங் (Sunwing) எனப்படும் விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்று கடந்த வாரம் அவசரமாக றொரன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்றும் நோக்கில் இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதனை தாம் அவதானித்ததாகவும் விரைந்து செயற்பட்டதாகவும் விமானப் பணிப் பெண்ணாக கடமையாற்றி வரும் மாரிஸா ரொட்ரிகோஸ் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து வரும் பெண்ணை இருக்கையில் அமர்த்தி, சீ.பீ.ஆர் முதலுதவி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்த மருத்துவ மாணவர் ஒருவரும், தாதி ஒருவரும் மாரடைப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்ட பெண் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதாகவும் முதலுதவிகள் மூலம் செயற்கை சுவாசத்தை வழங்கியதாகவும் விமானப் பணிப்பெண் தெரிவிக்கின்றார்.
18 ஆண்டு கால விமானப் பணிப் பெண் அனுபவத்தில் முதன் முறையாக சீ.பீ.ஆர் முதலுதவி வழங்கியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஆபத்தில் இருந்த பயணியை காப்பாற்றுவதற்கு விரைந்து செயற்பட்ட விமானப் பணிப் பெண் மாரியா உள்ளிட்ட ஏனைய உதவிய அனைவருக்கும் விமான சேவை நிறுவனம் நன்றி பாராட்டியுள்ளது.