எனது பிள்ளையை தன்னந்தனியாக அனுப்பி வைத்தார்கள்... கனடா விமானம் மீது ரொறன்ரோ தாயார் காட்டம்
வெளிநாட்டில் இருந்து சர்வதேச விமானத்தில் தமது பிள்ளையை தன்னந்தனியாக அனுப்பி வைத்துள்ளதாக ஒன்ராறியோ தாயார் ஒருவர் ஏர் கனடா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரொறன்ரோவில் வசிக்கும் மோனிகா பெரஸ் என்பவரே தமது 11 வயது மகன் தொடர்பில் ஏர் கனடா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மோனிகா பெரஸ் என்பவரின் மகன் செபாஸ்டியன் கடந்த ஜூன் மாதம் மெக்சிக்கோ சிட்டியில் வசிக்கும் உறவினரை சந்திக்கும் பொருட்டு சென்றுள்ளார். தனியாகவே மெக்சிக்கோ சென்றுள்ள அவர், தன்னந்தனியாகவே கனடாவுக்கும் திரும்பும் வகையில் பயணத்திட்டம் முடிவு செய்திருந்ததனர்.
ஆனால் ஏர் கனடா விமான நிறுவனத்திற்கு கூடுதலாக 200 டொலர் கட்டணம் செலுத்தி, தமது மகனை கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக மோனிகா தெரிவித்துள்ளார். ஏர் கனடா நிறுவனம் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையிலேயே தாம் கட்டணம் செலுத்தியதாக்வும் மோனிகா தெரிவித்துள்ளார்.
ஆனால், செப்டம்பர் 14ம் திகதி செபாஸ்டியன் கனடாவுக்கு திரும்ப முடிவு செய்த நிலையில், ஏர் கனடா அலுவலகத்திற்கு தாம் தொடர்பு கொண்டதாகவும், பதில் ஏதும் அவர்கள் தரவில்லை எனவும் மோனிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் மெக்சிக்கோ ஏர் கனடா அலுவலகம் கைவிட்டதையடுத்து, ரொறன்ரோவுக்கு திரும்பும் இன்னொரு குடும்பத்தினர் தமது மகனை கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்து, அவர்களே அனைத்து உதவிகளும் செய்துள்ளதாக மோனிகா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மீண்டும் ஏர் கனடா அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு விசாரிக்கையில், அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை என்றே பதிலளித்துள்ளனர். மேலும் இது தொடர்பில் விசாரித்து உரிய முடிவெடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
தற்போது ஏர் கனடா சார்பில் 200 டொலர் மதிப்புள்ள எதிர்கால பயணத்திற்கான வவுச்சர் ஒன்றை மோனிகாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதை ஏற்க மறுத்துள்ள மோனிகா தமது பணத்தை திரும்ப அளித்தால் போதும் எனவும் இனி மேலும் தாம் ஏர் கனடா விமான சேவையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.