ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த இந்தியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்தியாவிலிருந்து விடுமுறையை கொண்டாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நான்கு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஜெகஜீத் சிங் ஆனந்த், சுகானி ஆனந்த், கீர்த்தி பேடி, ரீமா சோந்தி என்பதும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
23 வயது நிரம்பிய ஜெகஜீத் சிங் ஆனந்த் மெல்போர்னில் செவிலியராக வேலை பார்த்தார். அவர் ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.
20 வயது நிரம்பிய சுகானி ஆனந்த், கீர்த்தி பேடி ஆகிய இரு பெண்களும் மாணவர் விசாவில் வந்து படித்துக்கொண்டிருந்தனர்.
விடுமுறையில் அவர்களை பார்ப்பதற்காக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 40 வயதான ரீமா சோந்தி என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
4 பேரும் கடலில் மூழ்கி இறந்திருப்பது அவர்களின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த விபத்து விக்டோரியா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகவும் துயரமான சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.