சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு
சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னுக்கு (Shane Warne) அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் (Shane Warne) ( வயது – 52) நேற்று காலமானார்.
தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது ஷேன் வோர்ன் (Shane Warne) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(Shane Warne) ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் ( Scott Morrison) அறிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் ஷேன் வோர்னும் (Shane Warne) ஒருவர் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
